சிங்கப்பூரில் தனியார் பேருந்தை திருடியதாக ஆடவர் ஒருவர் கைது..!

indian-origin-man-jailed stealing
(Photo: Google Maps Street View)

சிங்கப்பூரில் தனியார் பேருந்தை திருடியதாக 41 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 28 மதியம் 1:30 மணிக்கு, உட்லேண்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு கனரக வாகன கார் நிறுத்தத்தில் பேருந்து திருடப்பட்டதாக பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் காவல்துறைக்கு கிடைத்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 41 பேர் பட்டியலிலிருந்து நீக்கம்..!

காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமாகவும், சி.சி.டி.வி கேமராக்களின் காணொளி உதவியுடனும், உட்லேண்ட்ஸ் மற்றும் ஜுராங் பிரிவு காவல்துறை அதிகாரிகள் செப்டம்பர் 1ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை கைது செய்தனர்.

வாகனம் திருடப்பட்ட குற்றத்திற்காக அந்த நபர் மீது செப்டம்பர் 3ஆம் தேதி இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்தின் கீழ், குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

வாகன உரிமையாளர்களுக்கான சில குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறை பட்டியலிட்டுள்ளது:

  • உங்கள் வாகனங்களை நன்கு வெளிச்சம் உள்ள இடங்களில் நிறுத்துங்கள்
  • உங்கள் வாகனங்களுக்கு திருட்டு அபாய அலாரத்தை நிறுவவும்
  • வாகனத்தின் சாவியை எடுத்து, வாகனத்தில் இல்லாத போது கதவுகளைப் பூட்டவும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட 3 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
  Facebook
 Twitter
 Telegram

Sharechat

Instagram