சிங்கப்பூரில் பெண்களை ஆபாச காணொளி எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தவருக்கு சிறை.!

Man, 61, jailed 16 weeks for taking upskirt videos as 'challenge'

61 வயதான மனிதர், தனிப்பட்ட “சவாலாக” பெண்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துள்ளார். இந்த குற்றச்செயலுக்காக 16 வாரச் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பூன் ஹெங் வா என்ற அந்த வயதானவர், காணொளி எடுக்க தொடங்கிய இரண்டாவது மாதம் சிக்கினார், அவரது தொலைபேசியில் ஆறு ஆபாச வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தினந்தோறும் சுமார் 4 பெண்களை ஆபாச காணொளி எடுப்பதை வழக்கமாக அவர் கொண்டிருந்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பெண்களின் மானத்திற்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட குற்றத்திற்காக அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த குற்றத்திற்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிங்கப்பூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.