டாக்ஸி ஓட்டுனரை தாக்கிய ஆடவருக்கு சிறை

Photo: TaxiSingapore.Com

டாக்ஸி ஓட்டுனரை தாக்கிய ஆடவர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Zouk இரவு விடுதியில் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக டாக்ஸியைக் தேடிய இருவர், ஓட்டுநர் டாக்ஸியுடன் இருப்பதை கண்டனர்.

அவரை அணுகி டாக்ஸி வேண்டும் என்று இருவரும் கேட்க, தொலைபேசி முன்பதிவு பெற்று காத்திருப்பதால் வரமுடியாது என்று அவர்கள் கோரிக்கையை ஓட்டுநர் நிராகரித்தார். இதனால், கடுப்பான அவர்கள் இருவரும் ஓட்டுனரை தாக்கினர்.

கல்லாங்-பாயா லெபார் அதிவிரைவுச் சாலையில் 9 வாகனங்கள் மோதி கடும் விபத்து

அவர்களில் ஒருவரான 30 வயதான கோ லியாங் காய் என்பவருக்கு இன்று வெள்ளிக்கிழமை (அக் 28) நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு உதவியாக செயல்பட்ட நபர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதற்காக, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஊழியர்களுக்கு அடுத்தகட்ட தடுப்பூசி போடும் பணி விறுவிறு