சிங்கப்பூரில் புகைபிடித்த குற்றத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை..!

Man jailed for causing hurt, offering S$12 bribe to Certis CISCO officers
Man jailed for causing hurt, offering S$12 bribe to Certis CISCO officers

சிங்கப்பூரில் அமலாக்க அதிகாரியை காயப்படுத்தி லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்திற்காக ஒருவருக்கு இரண்டு மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத்தண்டனை புதன்கிழமை (ஜூலை 22) விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஒரு ப்ளாக்கின் அடித்தளத்தில் புகைபிடித்த குற்றத்திற்காக பிடிபட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ராட்டினம் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் நாளை திறக்கப்படும்..!

கடந்த ஜனவரி 27ஆம் தேதி சுமாங் லிங்கில் (Sumang Link) உள்ள ஒரு ப்ளாக்கின் அடித்தளத்தில் லியு ஹுய்பின் (Liu Huibin) என்ற சீன நாட்டை சேர்ந்தவர் புகைபிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு அதிகாரிகள் அவர் புகைபிடிப்பதை கண்டனர். லியு தடைசெய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்த குற்றத்திற்காக, இரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு நோட்டீஸ் அளிக்க சென்றனர்.

இதில் குற்றத்தைப் உணர்ந்த அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றார், ஆனால் அவர் இரு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

மீண்டும், லியு அந்த இடத்தை விட்டு தப்பிக்க முயன்ற போது, அதிகாரிகளில் ஒருவரின் மணிக்கட்டைப் பிடித்தார். இதன் விளைவாக அதிகாரியின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.

லியு பின்னர் S$10 மற்றும் S$2 பணத்தை எடுத்து, அவர் மீது எந்த அமலாக்க நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இரண்டு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக வழங்கினார். இரண்டு அதிகாரிகளும் அதனை பெற மறுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்குப் வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

ஒரு பொது ஊழியரை தனது கடமையை செய்யவிடாமல் தடுத்து, காயத்தை ஏற்படுத்திய குற்றவாளிகள் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதம் அல்லது பிரம்படியும் எதிர்கொள்வர்.

ஊழல் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$100,000 வரை அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்வர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg