புகைபிடித்து சிக்கிய நபர்; அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததற்காக சிறையில் அடைப்பு..!

Man jailed for offering bribe to officer after being caught smoking
Man jailed for offering bribe to officer after being caught smoking under sheltered walkway

சிங்கப்பூரில் ஒரு நடைபாதையில் புகைபிடித்த 61 வயதான நபருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புகைபிடித்துக்கொண்டிருந்த போது, அமலாக்க அதிகாரியிடம் சிக்கிய அந்த நபர், லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை (மார்ச் 16) விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் நுழையும் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் கட்டாய வீட்டில் தங்கும் உத்தரவு..!

கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி யிஷூனில் வழக்கமான ரோந்துப் பணியில் அதிகாரிகளால் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வோங் சின் வா என்ற அந்த நபர், ஒரு ஷெல்டர் நடைபாதையின் கீழ் புகைபிடிப்பதை அவர்கள் கண்டதாக, ஊழல் குறித்த புலனாய்வுப் பணியகம் (CPIB) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் (NEA) அமலாக்க அதிகாரி திரு கோபினாத் முனுசாமி, வோங் செய்த குற்றத்தை அவரிடம் தெரிவித்து, வோங்கின் NRIC எனப்படும் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கூறினார்.

அதை தொடர்ந்து வோங், திரு முனுசாமியிடம் முதலில் கனிவாக பேசத் தொடங்கினார்.

நீதிமன்றத்துக்கு அபராதம் செலுத்த, வோங்கின் விவரங்களை சாதனத்தில் உள்ளிடும் போது, நான்கு S$50 பணத்தை வோங் அதிகாரியிடம் லஞ்சமாக வழங்கினார்.

பின்னர், லஞ்சத்தை நிராகரித்த திரு முனுசாமி, இது குறித்து CPIB-க்கு தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வோங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஊழலுக்கு சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை சிங்கப்பூர் பின்பற்றுகிறது. மேலும், லஞ்சம் கொடுப்பது அல்லது பொது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பது கடுமையான குற்றம்.

ஊழல் குற்றத்தில் தண்டனை உறுதிசெய்யப்படும் எந்தவொரு நபருக்கும் S$100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!