PaySlip மூலம் வங்கியில் மோசடி; சுமார் $180,000 கடன் பெற்றவர் கைது!

‘நான் என்ஜினீயர் மாதம் $20000 சம்பளம்’ பெறுவதாக பொய்யான ஆவணங்களை வங்கியில் காட்டி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Ng Leok soon (66) என்பவர் 2012 ஆம் ஆண்டு போலியான ஆவணங்களை காட்டி வங்கியில் சுமார் $181669 வரை ஏமாற்றி கடன் பெற்றுள்ளார்.

நீதிமன்றம் இது குறித்து குறிப்பிடுகையில் (ஜூன் 24), இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதற்காக Ng Leok soon -க்கு 1 வருடம் மற்றும் 7 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Ng Leok soon உண்மையில் Redhill Food சென்டரில் 85, Redhill லையன் பகுதியில் coffee ஸ்டால் நடத்தி வந்துள்ளார்.

தன்னுடைய நண்பன் Alvin Chua Yuen Shen என்பவரிடம் தாம் மிகுந்த கடனில் இருப்பதாகவும், அதற்காக கடனாக அதிக பணம் பெற்றுத்தர வேண்டியும் அவரிடம் கூறியுள்ளார்.

கடன் பெறுவதற்கான Alvin வங்கியில் Pay slip மூலம் கடன் பெறும் முறையை கூறியுள்ளார். இதனை அடுத்து CGGVeritas Services (சிங்கப்பூர்) நிறுவனத்திடம் இருந்து 4 Pay Slips பெற்றுக்கொண்டு தான் என்ஜினீயர் என்றும், இந்த நிறுவனத்தில் 12 வருடம் வேலை பார்த்து வருவதாகவும், மேலும் மாத சம்பளம் $20000 வெள்ளி என்று பொய்யான ஆவணங்களை சமர்பித்து இந்த லோன் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சுமார் $181669 வெள்ளி வங்கியில் Pay Slip மூலம் கடன் பெற்றுள்ளார். இந்த குற்றத்திற்காக அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.