சிங்கப்பூரில் வெளிநாட்டு ஆடவரை காணவில்லை – தகவல் தெரிந்தால் கூறும்படி காவல்துறை வேண்டுகோள்

indian-origin-man charged singapore

சிங்கப்பூரில் காணாமல் போன 64 வயதுமிக்க வெளிநாட்டு ஆடவர் குறித்து போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

64 வயதான சீன நாட்டவரை கடந்த 8ஆம் தேதியில் இருந்து காணவில்லை என்று SPF கூறியுள்ளது.

சிங்கப்பூரில் காரின் கீழே பதுங்கி இருந்த மிகபெரிய மலைப்பாம்பு (வீடியோ) – ஓட்டுனர்கள் உஷார்

அவர் கடைசியாக பிளாக் 4 Telok Blangah Cresல் காணப்பட்டார் என்றும், குட்டையான கால்சட்டையுடன் வெள்ளை போலோ டி-ஷர்ட்டும் அவர் அணிந்திருந்தார் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் யாரேனும் அவரை கண்டால் 999 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கூடுதலாக தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

போலி ஓட்டுநர் உரிமம்… சிக்கிய வெளிநாட்டவர் – உடனே கைது செய்த போலீஸ்