சிங்கப்பூரில் புல் வெளியில் கிடந்த iPhone-ஐ திருப்பி கொடுக்காமல் வைத்துக்கொண்டவருக்கு அபராதம்..!

Man picked up iPhone on grass patch and pocketed it instead of returning it, gets fined
(Photo: Must share news - For illustration purposes only)

ஆங் மோ கியோவில் (Ang Mo Kio) ஒரு HDB பிளாக்கில் அருகிலுள்ள புல்லில் கிடந்த S$1,000 மதிப்புள்ள iPhone கைபேசியை பார்த்த ஒருவர், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று உரிமையாளரிடம் திருப்பித் தரவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி, கைப்பேசி உரிமையாளர் திரு.வாங் என்பவர் தமது iPhone XR -யை தொலைத்தார்.

இதையும் படிங்க : சுமார் 4,300 வேலைகளை குறைக்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழுமம்..!

இதில் 30 வயதான டான் யியாப் மிங் (Tan Yiap Ming) என்பவர் கைப்பேசியை திருப்பி கொடுக்காமல் சொந்தமாக்கிக்கொண்டதற்காக S$3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியின் உரிமையாளர் திரு வாங், கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி iPhone XR கைத்தொலைபேசியுடன் ஆங் மோ கியோ வீட்டுத் தோட்டத்தில் சுற்றித் திரிந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆங் மோ கியோ அவென்யூ 3இல் உள்ள பிளாக் 202க்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கண்டெடுத்த அந்த கைப்பேசியை உரிமையாளரிடம் அல்லது அதிகாரிகளிடம் ஒப்படைக்க டான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.

இதுகுறித்து திரு.வாங் புகார் அளித்ததை தொடர்ந்து, கைபேசியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கைப்பேசி திரு. டானிடம் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு அந்த அபராதத்தை S$1,000 தவணைகளில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. நேர்மையற்ற முறைகேடாக இந்த செயலுக்கு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

இதையும் படிங்க : பல லட்சக்கணக்கான மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கலைஞன் வடிவேல் பாலாஜி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…