சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரி போல ஏமாற்றி கைப்பேசியை கைப்பற்றிய சந்தேக ஆடவர் கைது

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

காவல்துறை அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்ததாகவும், திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படும் 34 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 7 அன்று இரவு 10:30 மணியளவில், அந்த ஆடவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்று அடையாளம் காட்டி ரோவல் (Rowell) சாலையில் பாதிக்கப்பட்டவரை அணுகினார்.

சிங்கப்பூரில் கனமழையை தொடர்ந்து… அடுத்த 2 வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

பின்னர், சோதனை நடத்துவதாக அந்த ஆடவர் பொய் கூறி பாதிக்கப்பட்டவரிடம் கைப்பேசியை கைப்பற்றி கொண்டார்.

மேலும், ஜனவரி 11ஆம் தேதி, டான்ஜோங் பகரில் (Tanjong Pagar) உள்ள காவல் நிலையத்தில் கைப்பேசியை பெற்றுகொள்ளுபடி பாதிக்கப்பட்டவரிடம் ஆடவர் கூறினார்.

அதனை தொடர்ந்து இறுதியாக அந்த ஆடவர் காவல்துறை அதிகாரி அல்ல என்பதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர், ஜனவரி 13 அன்று காவல்துறையிடம் புகார் பதிவு செய்தார்.

மத்திய காவல் பிரிவு அதிகாரிகள் அந்த போலி ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்து, நேற்று (ஜன. 15) கைது செய்தனர்.

அவர் மீது இன்று (ஜன. 16) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கையில் 89 சந்தேக நபர்கள் கைது