சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகளால் Taser மூலம் சுடப்பட்ட நபர் கைது..!

Man tasered by police arrested after scuffle on Esplanade Drive
File Photo

சிங்கப்பூர் Esplanade டிரைவில், ஆடவர் ஒருவரை குறைந்தது ஆறு காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைக்கும் ஒரு பரபரப்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது குறித்து நேற்று பதிவிட்டு இருந்தோம், அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன அந்த காணொளியில், ஆறு அதிகாரிகள் சாலையின் நடுவில் வெள்ளை சட்டை அணிந்த ஆடவரை நோக்கி முன்னேறுவதை காணமுடிகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் முன்னாள் அதிபர், தமிழக வம்சாவளி எஸ்.ஆர். நாதன் மறைந்த தினம் இன்று – ஒரு சிறப்புப் பார்வை!

நேற்று காலை 10:30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு அதிகாரிகளுக்குக் காயம் ஏற்பட்டதை அடுத்து, 28 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, அவர்களை நோக்கி செல்வது காணொளியில் தெரிகிறது. பின்னர், அந்த ஆடவரை தற்காலிகமாக இயலாமல் செய்வதற்காக Taser வைத்து அதிகாரி ஒருவர் சுடுவதையும், அதன் பின்னர் அவர் தரையில் விழுவதையும் காணமுடிகிறது.

சம்பவ இடத்தில இருந்து தப்பி செல்ல முயன்ற அந்த ஆடவரை, காவல்துறையினர் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர்.

இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கிடையாது..!

பொது இடங்களில் ஒழுங்கற்ற நடத்தை, அரசு அதிகாரிகளுக்கு தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியது மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை உட்கொண்டதாக சந்தேகம் ஆகிய குற்றங்களுக்காக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், அவர் ஏற்கனவே காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த நபர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg