சிங்கப்பூரில் துப்புரவு ஊழியர் மீது உணவுத் தட்டை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மீது குற்றச்சாட்டு..!

Man to be charged after allegedly throwing plate of food at cleaner
Man to be charged after allegedly throwing plate of food at cleaner (Photo: Google Street View of 45 Quality Road)

சிங்கப்பூரில் உணவங்காடி நிலையத்தின் துப்புரவாளர் மீது உணவுத் தட்டை வீசியதாக 44 வயதான ஆடவர் நாளை (ஆக. 5) குற்றம் சாட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பூன் லேவில் (Boon Lay) 5 குவாலிட்டி ரோட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வேலை அனுமதி உடைய பயணிகள் உட்பட… மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும்..!

இருவர் இடையே ஏற்பட்ட இந்த தகராறின் போது, ​​அந்த ஆடவர் துப்புரவாளரைத் தள்ளி, கீழே விழச்செய்ததாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த ஆடவர் மீது கிரிமினல் பலத்தைப் பயன்படுத்தியமை மற்றும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும்.

கிரிமினல் பலத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், S$1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றம் நிருபிக்கப்பட்டால், ஆடவர் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதுபோன்ற வன்முறைச் செயல்களை காவல்துறை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும், சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்று SPF தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு ஊழியரையும், அவரின் வேலையையும் காப்பாற்ற தயார்; இங் சீ மெங்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg