மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு துப்பாக்கி கடத்தல் – இருவருக்கு சிறை மற்றும் அபராதம்..!

Man who smuggled airsoft rifles into Singapore from Malaysia gets jail
Man who smuggled airsoft rifles into Singapore from Malaysia gets jail . (Photos: ICA)

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்சாஃப்ட் (Airsoft) துப்பாக்கிகளை கடத்திய ஒருவர் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டார்.

பின்னர் அவருடைய வாடிக்கையாளரையும் காவல்துறை பிடித்தனர். இருவருக்கும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் (ஜூலை 13) விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூர்-மலேசியா எல்லை தாண்டிய பயணம்; ஆகஸ்ட் 10 முதல் தொடங்க இலக்கு..!

ஜோயல் லிம் சு-மிங் என்பவரை கடந்த 2018 ஜூலை 2ஆம் தேதி, உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் பிடித்தனர்.

ஜோயல் கார் இருக்கை உள்ளே M4A1, HK416 போன்ற துப்பாக்கிகளின் பாகங்களை மறைத்து வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் சோதனையில் இருந்து தப்பிக்க காரை வேகமாகக் செலுத்த முயன்றுள்ளார்.

இதனை அடுத்து இணையத்தளங்களின் மூலம் துப்பாக்கிகளை விற்று வருவதும் தெரியவந்தது. .

இதில் 31 வயதான ஜோயல் லிம் சு-மிங் என்பவருக்கு, 12 வார சிறைத்தண்டனையும், S$10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், துப்பாக்கி வாங்க முயன்ற 47 வயதான விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி லீ சூன் மிங், என்பவருக்கு இரண்டு வார சிறைத்தண்டனையும், S$6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து 12 வெளிநாட்டினர் நாடு கடத்தல் – மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg