துவாஸ், உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் COVID-19 சோதனை கட்டாயம்

Mandatory COVID-19 tests checkpoints
(PHOTO: Yahoo News Singapore)

மலேசியாவிலிருந்து துவாஸ் மற்றும் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) முதல் COVID-19 கிருமித்தொற்று சோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல், கோவிட் -19 ஆன்டிஜென் விரைவு சோதனை (Antigen rapid testing) படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செயல்!

சிங்கப்பூருக்குள் நுழையும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் உடன் வருபவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்படும்.

அவர்களின் சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் சமூகத்துடன் தொடர்பு கொள்ளக்கூடும் என்பதால், இந்த சோதனை முறை அறிமுகப்படுத்தபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், COVID-19 பாதிப்புகளை அடையாளம் காணவும், அதனால் ஏற்படும் ஆபத்தை மேலும் குறைக்கவும் அது உதவும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

சாலை வடிகால் கம்பியின் இடைவெளியில் சைக்கிள் சிக்கி விபத்து – வெளிநாட்டவர் மருத்துவமனையில்…