நோய்வாய்ப்பட்ட பெண் தோழியை ‘கவனித்துக் கொள்ள’ சென்ற சிங்கப்பூரர், அப்பெண்ணிடம் இருந்து S$ 52,000 திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்!!

Singapore man moves in to ‘take care’ of ill girlfriend & allegedly steals S$52,000 from her

மார்கஸ் காங் வீ கியோங் என்பவர் (அவரது வயது மற்றும் தொழில் குறித்த தகவல் இல்லை) அவரது பெண் தோழியான ஃபெலிசியா லீ யென் பெங்கிடமிருந்து பணத்தை திருடியதற்காக 32 பிரிவில் திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக The Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016 க்கு இடையில் தனது பெண் தோழியின் சேமிப்பிலிருந்து, ATM மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் S$ 52,000 திருடியதாக நீதிமன்றத்தில் மொத்தம் 54 குற்றச்சாட்டுகள், அக்டோபர் 4 அன்று விசாரணைக்கு வந்தது.

மேலும், இந்த பணமாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தனக்கு தெரியாது, என்று பொய்யான தகவலை போலீசுக்கு வழங்கியதற்காக காங் மீது கூடுதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தனது சொந்த வங்கி கணக்கிற்கு பண மாற்றம் செய்ய காங் தனது ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக காங் S$ 52,000 திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பல மாதங்களாக இந்த திருட்டுச் சம்பவம் குறித்த வங்கி அறிக்கைகளையும் பெறவில்லையா? என்று நீதிமன்றம் லீயிடம் கேள்வி எழுப்பியது.

இந்த SMS சேவையை யாரோ செயலிழக்கச் செய்துள்ளதாகவும், அதன் காரணமாக பரிவர்த்தனைகள் குறித்து எந்தவித SMS அறிவிப்புகளையும் பெறவில்லை என்று லீ தரப்பில் கூறப்பட்டது.

இறுதியில், 54 பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங் S$ 15000 -ஐ நீதிமன்றத்தில் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.