சிங்கப்பூர் தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ள மரூன் 5 இசை நிகழ்ச்சி – டிக்கெட் முன்பதிவுகள் விரைவில் தொடக்கம் !

maroon 5

சிங்கப்பூர் தேசிய மைதானத்தில் மரூன் 5 இசைக்குழு நவம்பர் 28, 2022 திங்கட்கிழமை அன்று இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளது.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளின் முன் விற்பனை ஆகஸ்ட் 23, செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது என இந்நிகழ்ச்சிக்கான அமைப்பாளர் லைவ் நேஷன் கூறியுள்ளது. மேலும் இதற்கான டிக்கெட் விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன: S$128, S$168, S$198, S$218, S$238 & S$278

PayPal பயனர்கள், ஆகஸ்ட் 24 காலை 10 மணிக்கு முதல் ஆகஸ்ட் 25 இரவு 11:59 மணி வரை டிக்கெட்டுகளுக்கான அணுகலைப் முன்னரே பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. ஊடக மற்றும் லைவ் நேஷன் உறுப்பினர்களுக்கான முன் விற்பனை ஆகஸ்ட் 25 வியாழன் காலை 10 மணி முதல் இரவு 11:59 மணி வரை நடைபெறவுள்ளது. பொது விற்பனை ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு www.ticketmaster.sg இல் தொடங்கவுள்ளது.

மேலும் அவர்களின் உலகம் முழுவதும் மேற்கொள்ளவிருக்கும்  சுற்றுப்பயணத்தில் சியோல், டோக்கியோ, ஒசாகா, மணிலா மற்றும் பாங்காக்கில் இசைநிகழ்ச்சிகள் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.