சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களில் பட்டியலில் McDonald’s உள்ளிட்ட 5 இடங்கள் சேர்ப்பு..!

Marsiling Lane Market & Tampines Mart McDonald's among locations visited by infectious Covid-19 cases
Marsiling Lane Market & Tampines Mart McDonald's among locations visited by infectious Covid-19 cases (Photo: Mothership)

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக 5 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பட்டியல்

மார்சிலிங் லேன் மார்க்கெட் மற்றும் உணவங்காடி (ஜூன் 16, இரவு 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை)

506 தெம்பனிஸ் சென்ட்ரல் 1இல் அமைந்துள்ள Sheng Siong சூப்பர்மார்க்கெட் (ஜூன் 26, காலை 11:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை)

201B தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 21 இல் ஒரு சூப்பர் மார்க்கெட் (ஜூன் 27, காலை 9:00 முதல் 9:30 வரை)

10 அட்மிரால்டி ஸ்டிரீட், நார்த்லிங்க் கட்டிடத்தில் Chang Cheng Mee Wah காபி கடை (ஜூன் 27, காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை)

5 தெம்பனிஸ் ஸ்டிரீட் 32 இல் உள்ள தெம்பனிஸ் மார்ட்டில் McDonald’s (ஜூன் 28, இரவு 8:10 முதல் 9:10 மணி வரை)

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதுபற்றிய முழு பட்டியலையும் MOH-ன் இணையதளத்தில் காணலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 78 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg