மெக்டொனால்டு கடை ஊழியரிடம் மோசமாக நடந்துகொண்ட வாடிக்கையாளர்!

McDonald's Customer verbally abuses
(Photo: Complaint Singapore Facebook)

பொங்க்கோலில் உள்ள மெக்டொனால்டு கடையில் உள்ள ஊழியரிடம் வாடிக்கையாளர் ஒருவர் மோசமாக நடந்துகொள்ளும் காணொளி கேமராவில் பதிவாகியுள்ளது.

Complaint Singapore என்ற பேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்ட பதிவின் படி, பொங்க்கோலில் உள்ள Oasis Terracesஇல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான திட்டம் – பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்

கடந்த ஜூலை 24 அன்று மதியம் 1:55 மணிக்கு 681 புங்க்கோல் டிரைவில் வேண்டுமென்றே துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் எப்படி தொடங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர் தகாத வார்த்தைகளில் பேசும் போது, ஏன் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என்று ஊழியர் கேள்வி கேட்டுள்ளார், மேலும் காவல்துறையை அழைக்கலாம் என்று கூறி அவரது பெயரை ஊழியர் கேட்டுள்ளார்.

வெளிநாட்டினருக்கு நற்செய்தி: செப்டம்பரில் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்..!

அதற்கு பதிலளித்த அந்த ஆடவர், “இப்போதே காவல்துறையை அழைக்க முடியும்” என்று சத்தமாக கூறியுள்ளார்.

இருப்பினும், ஊழியர் மீண்டும் அவரின் பெயர் அல்லது தொலைபேசி எண்ணைக் கேட்கும்போது, ​​அவர் அதனை கூற மறுத்துள்ளார்.

“நான் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்தால், காவல்துறை என்னை அழைக்கும் சரிதானே? நான் அதை கொடுக்கப் போவதில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் அவர் தகாத வார்த்தையை பயன்படுத்தி, பின்னர் அங்கிருந்து சென்றார்.

இதுபற்றி காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

அதிக வாடகையால் அவதிப்பட்டுவரும் லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு ஆதரவளிக்க கோரிக்கை!