அனைத்து கிளைகளிலும் உணவக சேவைகளை நிறுத்தி வைப்பதாக சிங்கப்பூர் மெக்டொனால்டு (McDonald’s) அறிவிப்பு..!

McDonald's Singapore suspends all restaurant operations until May 4
McDonald's Singapore suspends all restaurant operations until May 4

சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்டு (McDonald’s) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) முதல் “சர்க்யூட் பிரேக்கர்” என்னும் புதிய நடவடிக்கை காலம் முடியும் வரை, அனைத்து விற்பனை நிலையங்களிலும் தனது உணவக சேவைகளை நிறுத்தி வைப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில், Drive-through மற்றும் டெலிவரி சேவைகளும் அடங்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்” – வைரமுத்து..!

அதாவது Drive-through’ சேவை காலை 8 மணியுடனும், டெலிவரி சேவை காலை 10.30 மணியுடனும் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் COVID-19-க்கு எதிரான போராட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மெக்டொனால்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த துரித உணவு நிறுவனம், சிங்கப்பூரில் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது மற்றும் நாடு முழுவதும் 135-க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்தி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கட்டுமானத் துறையில் உள்ள வேலை அனுமதி மற்றும் S Pass வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!