வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்..!

Measures to control COVID-19 infection in foreign worker Dormitories
Measures to control COVID-19 infection in foreign worker Dormitories (Photo: Roslan RAHMAN / AFP)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 நோய்ப் பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீவிர பரிசோதனைகள்

பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து சிறிது காலம் அதிகமாகவே இருக்கும் என்று லாரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்குப் பாதிப்பு மிதமாகவே உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அனைத்து கிளைகளிலும் உணவக சேவைகளை நிறுத்தி வைப்பதாக சிங்கப்பூர் மெக்டொனால்டு (McDonald’s) அறிவிப்பு..!

ஊழியர்களின் நலன்

அரசாங்க முயற்சிகளை ஒருங்கிணைக்க, அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் முயற்சிகளை, மனிதவள அமைச்சகம் (MOM) ஒருங்கிணைத்து உள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஆரோக்கியமான ஊழியர்கள், மற்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலான வசதிகள்

மிதமாகப் பாதிக்கப்பட்டோருக்கு, சமூகப் பராமரிப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

குணமடைந்த ஊழியர்களுக்கு, மற்ற இடங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்” – வைரமுத்து..!