நான்கு மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருப்பு – விரக்தியடைந்த சுற்றுலா பயணிகள்.

melaka tourbus

சுற்றுலாப் பேருந்துகளில்,  இரண்டாவது இணைப்பில் 4 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிக்கொண்ட சிங்கப்பூரர்கள், சனிக்கிழமையன்று காலை 7:30 மணிக்கே மலேசியாவிற்கு புறப்பட்ட போதிலும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

சுற்றுலா குழு ஒன்று, மேலகாவை பார்வையிடுவதற்காக சிங்கப்பூரில் இருந்து மலேசியா புறப்பட்டபோது சோதனைச் சாவடியில் குடிவரவு அனுமதிக்காக நான்கு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிட்டது.

சுற்றுலாப் பேருந்துகளைத் தவிர்த்து பொது மற்றும் தொழிற்சாலை பேருந்துகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டதாலும், நீண்டநேரம் காத்திருந்தத்தாலும் விரக்தியடைந்தனர். இச்செயல் நியாயமற்றது என்றும், மலேசியாவில் தங்களுடைய நேரத்தை செலவழிக்க எதிர்பார்க்கும் பயணிகளுக்கு, நமது சுற்றுலாத்துறையின் மீதுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடும் என்றும் இதைத் தொடர அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்றும்  பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேருந்துகளின் குடியேற்ற அனுமதிக்காக இருந்த இரண்டு பாதைகளில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகனங்கள் மிகவும் மெதுவாக நகர்ந்தன. பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை வழங்க இரு பாதைகளிலும் அனைத்து கவுன்டர்களையும் திறக்க வேண்டும் என்றும் பலரால் கூறப்பட்டுள்ளது.