வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடல்நல ஆரோக்கியம் போலவே “மனநல ஆரோக்கியம்” முக்கியம்

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

சிங்கப்பூரில் மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு கோவிட்-19 தொற்றுநோய் காரணம் என்று மனநல சுகாதார அமைப்பு (IMH) நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

கடுமையான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை அதிகமானோர் எதிர்கொள்ளும் எதிர்கொள்வதாகவும், சிலருக்கு தற்கொலை எண்ணங்களை கூட ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 3,486 பேருக்கு தொற்று பாதிப்பு – மேலும் ஒன்பது பேர் உயிரிழப்பு

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த ஊழியர்கள் விதிவிலக்காக கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளனர்.

அவர்களின் அடிப்படை தேவைகள் கவனிக்கப்படும் அதே வேளையில், ​​அவர்களின் மனநலத் தேவைகளை எளிதில் அளந்துவிட முடியாது.

அதிர்ஷ்டவசமாக, புலம்பெயர்ந்த ஊழியர்களுக்குத் தேவையான உதவியை செய்ய பல அரசு சாரா அமைப்புகள் இங்கு உள்ளன.

தொற்றுநோய்களின் போது அவர்கள் சந்தித்த மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, சிங்கப்பூரில் முதல் 24 மணி நேர அவசர உதவி நிலையத்தை HealthServe சமீபத்தில் தொடங்கியுள்ளது.

HealthServe கடந்த 2006ல் நிறுவப்பட்டது, அதன் கெய்லாங் கிளினிக்கில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு தேவையான மருத்துவத்தை அது வழங்குகிறது.

உடல்நல ஆரோக்கியம் போலவே மனநல ஆரோக்கியம் முக்கியமானது என்பதை உணர்ந்து, புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கும் மனநல முயற்சிகளை அது கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது.

இந்த அமைப்பு தற்போது ஐந்து ஆலோசகர்களைக் கொண்டுள்ளது, அவர்களால் புலம்பெயர்ந்த ஊழியர்களின் தாய் மொழிகளில் பேச முடியும்.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூருக்குள் வர அனுமதி