தெம்பனீஸ் கார்பார்க்கில் விழுந்த பெரிய மரம்: நசுங்கி சேதமடைந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்

தெம்பனீஸ் கார்பார்க்கில் விழுந்த பெரிய மரம்: நசுங்கி சேதமடைந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்
Stomp

சிங்கப்பூர்: பிளாக் 257 தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 21 இன் கார்பார்க்கில் மரம் விழுந்ததில் கார் ஒன்று கடும் சேதமடைந்தது.

இது தொடர்பான சம்பவத்தின் புகைப்படங்களை ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது. சம்பவ இடத்தில் ஊழியர்கள் நிற்பதையும் காண முடிந்தது.

சிங்கப்பூரில் அக்.1 முதல் இந்த ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் உயர்வு!

அந்த காரின் மேற்கூரை நசுங்கி உடைந்த நிலையில் மிக மோசமாக காணப்படுகிறது.

“மரம் பழமையானது மற்றும் தானாகவே கீழே விழுந்தது என்று நினைக்கிறேன். இதனால் அந்த Mercedes-Benz நசுங்கியது” என அதன் வாசகர் கூறியுள்ளார்.

தெம்பனீஸ் டவுன் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: “இதை பற்றி அறிந்திருக்கிறோம், தற்போது அந்த குடியிருப்பாளருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என கூறியுள்ளார்.

“ஏன்பா தேவையில்லை வேலை…” – இந்திய ஊழியருக்கு சிங்கப்பூரில் சிறை