சிங்கப்பூரில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை; அபராதம் விதித்ததாகப் பரவும் வதந்தி..!

Message circulating online about safe-distancing ambassadors imposing fines untrue: Enterprise Singapore
Message circulating online about safe-distancing ambassadors imposing fines untrue: Enterprise Singapore

சிங்கப்பூரில் ‘பாதுகாப்பான இடைவெளி’ குறித்து கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கும் தூதுவர் ஒருவர், வாடிக்கையாளரிடம் $300 அபராதத்தை விதித்ததாக சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் இதனை வதந்தி என்றும் இது உண்மை இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் நடப்புக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிமுறை; மீறுபவர்களுக்கு சிறை மற்றும் அபராதம்..!

இந்த பாதுகாப்பான இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு அரசாங்க முகவைகள் தூதுவர்களை நியமித்துள்ளன.

ஆனால், அவர்கள் அபராதம் விதிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறுகையில், பொது மக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் வரிசைகளில் நிற்கும்போதும் 1 மீட்டர் இடைவெளியைப் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது சில்லறை விற்பனை கடைகள் அல்லது பல்பொருள் அங்காடிகள் போன்ற பொது இடங்களில், தனிநபர்கள் வரிசையில் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாத வணிக உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அல்லது S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அதே போல் பாதுகாப்பு இடைவெளி விதிகளை மீறுபவர்கள், ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அல்லது S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு; மீறினால் வேலை அனுமதி ரத்து – MOM..!