சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் வெளியிட்ட காணொளி..!

Minister S Iswaran has created a encourage video message to foreign workers
Minister S Iswaran has created a encourage video message to foreign workers

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கவலையுடன் இருக்கும் ஊழியர்களைத் தட்டிக்கொடுக்கும் விதமாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் புதிய காணொளி செய்தி ஒன்றை அவர்களுக்கு பிரத்தியேகமாக உருவாக்கியுள்ளார்.

COVID -19 கிருமியின் பரவலை தடுப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஒரு மாதகாலமாக இந்த சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்னும் இதனை நான்கு வாரங்களுக்கு அதாவது ஜூன் 1ம் தேதி வரை அதை நீடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: COVID-19: சிங்கப்பூரில் 40 போலி செய்திகள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது : அமைச்சர் S. ஈஸ்வரன்..!

நாம் அனைவரும் வீட்டின் உள்ளே இருக்க வேண்டும், முகக்கவசம் அணிந்தும் ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு இருப்பதோடு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் உங்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம் அவற்றை போக்கும் வைகையில் சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு தேவையான உணவு வசதிகள், விடுதியில் உள்ள வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஊழியர்கள் தங்களின் குடும்பத்தோடு இணையம்மூலம் தகவல்களை பரிமாற்றிக்கொள்வதற்கான வசதிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் செய்துவருகிறது.

பரிசோதனைகள் கிருமித்தொற்று உள்ளவர்களை கண்டறிவதற்காகவே பரிசோதிக்கப்படுகிறது. கிருமித்தொற்று உறுதி செய்யப்படடோருக்கு அவர்களுக்கு தேவையான மருத்துவப் பராமரிப்பு செலவை அரசாங்கம் வழங்கும், சிங்கப்பூரர்கள் போலவே உங்களுக்கும் தேவையான, தரமான மருத்துவம் வழங்குவோம் என்றும் திரு எஸ் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இந்த COVID-19 போராடடத்தில் வெற்றிப்பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றிப்பெற முடியும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று தொடர்பு தகவல் அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: COVID-19 கிருமித்தொற்று: சிங்கப்பூரில் புதிதாக 632 பேருக்கு COVID-19 பாதிப்பு உறுதி..!