இந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் – எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்

Singapore travel
(Photo: AFF/Roslan Rahman)

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அக்.27 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நைஜீரியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

நைஜீரியாவில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்தும், தீவிரவாத தாக்குதல்களின் அபாயங்கள் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்ஸி ஓட்டுனரை தாக்கிய ஆடவருக்கு சிறை

இந்த நிலையில், சிங்கப்பூரர்கள் நைஜீரியாவுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுவதாகவும் அது கூறியுள்ளது.

தற்போது அங்கு நிலவி வரும் அசாதாரண நிலை அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களின் அபாயத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் பற்றி MFA விவரிக்கவில்லை.

நைஜீரியாவில் தற்போதுள்ள சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனிக்கவும் MFA அறிவுறுத்தியது.