பல் வலியால் அவதிப்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு, S$100 செலவில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் – குவியும் பாராட்டு

(Photo: IRR / FB and Unsplash)

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கடுமையான பல் வலியால் பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். முன்பு அதற்கான காரணங்கள் சரிவர தெரியவில்லை என்றாலும், பின்னர் அவர் பல்லை அகற்றவேண்டிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரியவந்தது.

இருப்பினும் சிகிச்சைக்கான பணம் அந்த ஊழியரிடம் இல்லாத காரணத்தால் மருத்துவரை சந்திப்பதில் தயக்கம் காட்டினார். இதனால் அவர் இட்ஸ்ரைனிங்ரெயின்கோர்ட்ஸ் (IRR) என்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனத்தை அணுகினார்.

“லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ஊழியர்களை பேருந்துகளுக்கு மாற்றுவது சுலபமல்ல”

அந்த தொண்டு நிறுவனம் கோரிய உதவியின் பெயரில், இந்த சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் செய்ய மனிதநேயம் மிக்க மருத்துவர் ஒருவர் அந்த அமைப்பை தொடர்புகொண்டார்.

அதன் பேரில் இந்த சிகிச்சை S$100 மேற்கொள்ளப்பட்டது, ஆனால், இந்த சிகிச்சையின் உண்மையான மதிப்பு S$1000 ஆகும்.

பின்னர் அந்த தொண்டு நிறுவனம் கூறியதாவது; நீண்ட நாட்களுக்கு பிறகு, அந்த ஊழியர் எந்த வலியும் இன்றி நன்கு உறங்கியதாகவும், இதுபோன்று எங்கள் நிறுவனத்தை அணுகிய யாரையும் தாங்கள் கைவிட்டது இல்லை எனவும், எங்களால் முடிந்தால் இலவசமாக சிகிச்சை தர மருத்துவர்களை அணுகுவோம் எனவும் தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் வாங்கும் குறைந்த பட்சம் S$10 தினக்கூலி கொண்டு அவர்களால் பல அத்தியாவசிய விஷயங்களை மேற்கொள்ள முடியாது. மேலும், அவர்களின் முதலாளிகளை அவ்வளவு எளிதில் அணுக முடியாது என்றும் அது கூறியது.

இந்த சூழலில் அவர்களுக்கு இது போன்ற உதவி நிச்சயம் தேவை எனவும், அதற்கு கருணை உள்ளதுடன் நாங்கள் உதவுவோம் எனவும் அது தெரிவித்துள்ளது.

இந்த பேருதவிக்காக ஊழியர், IRR அமைப்பை அணுகி மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

பேருந்து மோதிய விபத்தில் சைக்கிள் ஓட்டி மரணம்