சிங்கப்பூரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செயல்!

Migrant worker donates money
Migrant worker donates money (PHOTO: Alan Poh/FB & Google Streetview)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் தன்னலமற்ற செயல் சிங்கப்பூரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த ஜனவரி 17 அன்று பேஸ்புக் பயனர் Alan Poh, பெடோக் நார்த் பகுதியில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர், ஏழை பெண்ணுக்கு கொஞ்சம் பணம் நன்கொடை அளிப்பதைக் கண்டதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் சோதனை நடவடிக்கை.. 4 பேர் கைது, 2 கிலோவுக்கு மேல் போதைப்பொருள் பறிமுதல்!

அந்தப் பெண் அக்கம் பக்கத்தில் காணக்கூடிய கழிவு பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார் என்று Poh குறிப்பிட்டுள்ளார்.

Photo: Alan Poh/FB.

பின்னர், அந்த இடத்தில் இருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது சட்டைப் பையில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தார்.

பேஸ்புக் பதிவு

“இந்த வெளிநாட்டு ஊழியர் கடின வேலைகளை செய்வார் என்று நம்புகிறேன், அவர் பணத்தை சம்பாதிக்கவும், அதனை சேமிக்கவும் தனது வீட்டை விட்டு வெகு தொலைவில் இருந்தபோதிலும், அவர் தனது பணத்தை தேவைப்படும் ஒருவருக்கு கொடுக்க தயங்கவில்லை. அவரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. “

ஊழியரின் இந்த தன்னலமற்ற பொதுநல செயலை அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர். நாமும் அந்த நல்லுலத்தை பாராட்டுவோம்.

உணவு நிலையத்தில் சண்டை: ஒருவர் மருத்துமனையில் அனுமதி – காவல்துறை விசாரணை