COVID-19 தொற்று சந்தேகிக்கப்பட்ட இந்திய ஊழியர், சொந்த நாட்டுக்கு செல்ல விமான நிலையத்தில் சுற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்

(Photo: ET)

சிங்கப்பூரில், COVID-19 பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 26 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவர், மருத்துவமனையில் தங்காமல், சாங்கி விமான நிலைய பகுதியில் சுற்றித் திரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மற்றவர்களுக்கு COVID-19 நோய்த்தொற்றை பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தியது மற்றும் அனுமதியின்றி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியேறியது, ஆகிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் இந்திய நாட்டை சேர்ந்த பார்த்திபன் பாலச்சந்திரன் நேற்று (மே 14) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்.. கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசை

COVID-19 நோய்த்தொற்றை பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தியது மற்றும் சுகாதார அதிகாரியை அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனையில் பரிசீலிக்கப்படும்.

பார்திபன், ஜூராங் பென்ஜுரு தங்கும் விடுதியில் வசித்ததாக கூறப்பட்டுள்ளது, இந்த விடுதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி, நோய்த் தொற்று சந்தேகம் காரணமாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு, சோதனை முடிவுகள் தயாராகும் வரை வெளியே செல்ல வேண்டாம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் செவிலியர்கள் பலமுறை விளக்கினர்.

அதே நாளில் மாலை 5.30 மணியளவில், பார்திபன் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மருத்துவமனையை விட்டு வெளியேறினார், விமான நிலையத்திற்குச் சென்று டிக்கெட் வாங்கவும் உடனடியாக இந்தியா திரும்பவும் அவர் விரும்பியதாக கூறப்பட்டுள்ளது.

அவர் டாக்ஸி மூலம் சாங்கி விமான நிலைய முனையம் 1க்கு சென்றார் எனவும், அங்கு விமான நிலைய ஊழியர்களிடம் பேசினார் என்றும், மேலும் இந்தியாவுக்கு டிக்கெட் வாங்க முயன்றார் எனவும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அங்கு டிக்கெட் இல்லை என்றவுடன், நான்கு மணி நேரம் விமான நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர், காவல்த்துறையினர் அவரைக் கண்டுபிடித்து மீண்டும் SGHக்கு கொண்டு சென்றனர்.

தொற்று நோய்கள் சட்டத்தை மீறும் நபர்களுக்கு, S$10,000 வரை அபராதம், ஆறு மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் கோவிட் -19 சமூக பாதிப்புகள் அதிகரிப்பு – கடுமையாகும் நடவடிக்கைகள்