புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை வழங்கிய ‘ItsRainingRaincoats’!

Photo: 'ItsRainingRaincoats' Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (Migrant Workers) பல்வேறு அமைப்புகளும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு உதவிகளையும், பண்டிகைக்கால பரிசுப் பொருட்களையும் வழங்கி வருகின்றன.

சிங்கப்பூரில் புதிதாக 355 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு!

அந்த வகையில் ‘ItsRainingRaincoats’ என்ற சமூக அமைப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீசாக்களை (Pizzas) நாள்தோறும் அனுப்பி மகிழ்கிறது. மேலும், தொழிலாளர்கள் குழுவிற்கு 25 அல்லது அதற்கு மேற்பட்டபீசாக்களுக்கு உதவ அல்லது ஸ்பான்சர் செய்ய விரும்பினால், எங்களது பக்கத்திற்கு ‘Private Message’ செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. உங்களின் தாராள மனப்பான்மையால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ருசியான உணவை சாப்பிடுவார்கள் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்த இத்தாலி!

அதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கையால் எழுதப்பட்ட வாழ்த்துக் கடிதங்கள், வண்ண மயமான பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையைத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தயவு செய்து எங்களது கிறிஸ்துமஸ் பயணத்தை ஆதரிக்குமாறு ‘ItsRainingRaincoats’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“இலங்கை- சிங்கப்பூர் இடையே VTL, Non- VTL விமான சேவை”- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ‘ItsRainingRaincoats’ சமூக அமைப்பு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.