வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு புதிய தடுப்பூசி நிலையங்கள்

(Reuters file photo)

வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு புதிய தடுப்பூசி நிலையங்கள், சிலேத்தார் மற்றும் கிரான்ஜியில் திறக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நாடு தழுவிய திட்டத்தில் இது ஒரு கட்டமாக உள்ளது.

சிங்கப்பூரில் சமூக அளவில் 14 பேர் பாதிப்பு – 11 பேர் டான் டோக் செங் மருத்துவமனையுடன் தொடர்பு

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு, சிலேத்தார் தடுப்பூசி நிலையத்திற்கு சென்று பார்வையிட்ட மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ வலியுறுத்தினார்.

இதுவரை, 42,000 ஊழியர்கள் தங்கள் தடுப்பூசிகளை போட்டுகொண்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய நிலவரப்படி, பல மாதங்கள் பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்த வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில், மீண்டும் சிலர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களுக்கு தொற்று ஏற்படுவதை சமீபத்திய சம்பவங்களில் பார்க்க முடிந்தது, ஆனாலும் அவர்களின் நலனுக்காக தடுப்பூசி மிக அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் உதவிக்கு நன்றி தெரிவித்த இந்தியா!