புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தீபாவளி டிரைவ்- நன்கொடை வழங்குமாறு ‘ItsRainingRaincoats’ வேண்டுகோள்!

Photo: ItsRainingRaincoats Official Facebook Page

‘ItsRainingRaincoats’ என்ற தொண்டு அமைப்பு, சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது. அத்துடன், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்டப் பண்டிகைகளை பொதுமக்களின் பங்களிப்புடனும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டாடி வருகிறது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது பணிகளை செய்து வருகின்றனர். அவ்வப்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, ஆடைகள், கிஃப்ட்களையும் வழங்கி வருகிறது ‘ItsRainingRaincoats’.

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சா! – சட்டப்படி அனுமதியா? தடையா?

இந்த நிலையில், வரும் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தீபாவளியைக் கொண்டாட முடிவு செய்துள்ள ‘ItsRainingRaincoats’ தீபாவளி டிரைவை (Diwali Drive 2022) அறிவித்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் https://cityofgood.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில் கிடைக்கும் நன்கொடை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீட்சா, சமோசா மற்றும் பல சுவையான உணவுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதை செய்து மாட்டிக்காதீங்க! – சமைக்கப்பட்டிருந்தாலும் கூட சட்டப்படி குற்றம்தான்!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cityofgood.sg/ என்ற இணையதளப் பக்கத்தையும், ‘ItsRainingRaincoats’ அமைப்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.