பெயர், புகைப்படம் இல்லாமல் 2 ஆண்டுகளாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி செய்யும் இளைஞர்!

migrant workers Tampines gift
Stomp

தெம்பனீஸில் 19 வயது இளைஞர் ஒருவர், புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு பரிசுகளுடன் சேர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணை மற்றும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியையும் பரப்பி வருகிறார்.

நேற்று முன்தினம் வியாழன் (டிசம்பர் 23) மாலை சுமார் 5 மணியளவில் கிறிஸ்மஸ் பரிசுகளை அந்த இளைஞர் வழங்கியதாக ஸ்டாம்ப் வாசகர் கூறியுள்ளார்.

“எல்லாருக்கும் பண்டிகை காலம் மகிழ்ச்சியாய் அமைவதில்லை” – வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள்!

அதாவது, வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசு அட்டைகள், உடைகள் மற்றும் சாக்லேட்டுகளை அந்த இளைஞர் வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

அந்த இளைஞர் அதிகம் பேசவில்லை, சிரித்துக் கொண்டே, இந்த மாதிரியான விஷயங்களைச் செய்வதை ரசிப்பதாகவும், இரண்டு வருடங்களாக இதை செய்து வருவதாகவும் ஊறியுள்ளார்.

அவரின் புகைப்படத்தை எடுத்து அதை ஆன்லைனில் வெளியிடலாமா? என்று வாசகர் கேட்டுள்ளார், அதற்கு “ஆம்” என்று கூறிய இளைஞர் ஒரு நிபந்தனையையும் சொன்னார், அதில் என் பெயரை ஏதும் குறிப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த பெயர் கூறாமல் உதவி செய்யும் நல்லுள்ளத்தை கண்டு அவர் வியந்து பாராட்டினார்.

லிட்டில் இந்தியாவில் S$300,000 கொள்ளை: வெளிநாட்டவர் உட்பட கடைசி இருவர் குற்றாவளி என அதிரடி தீர்ப்பு