வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்வு தற்காலிக நிறுத்தம்

(PHOTO: NY Times)

வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தொற்றுநோய் பாதிப்பு மற்றும் சொந்த நாடுகளில் இருந்து வந்த ஊழியர்களின் தொற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணத் திட்டம்!

ஆகையால், நடமாட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

இது முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு ஊழியர்கள், தொழில் மற்றும் வாழ்வாதாரங்கள், அனைவரின் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதே எங்கள் பொறுப்பு என்றும் டாக்டர் டான், சிலேத்தர் தடுப்பூசி நிலையத்தை பார்வையிட்ட போது கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: அனைவரும் வெளியே செல்ல நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அது மற்றொரு கிரமிப்பரவல் அலையைத் ஏற்படுத்திவிடும், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன், கட்டுப்பாடுகளை தற்போது நிறுத்தி வைக்க முடிவு செய்தோம்” என்றார்.

இந்த தளர்வு திட்டங்களை அவசரப்படுத்த வேண்டாம் என்று நினைப்பதாக மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ கூறியுள்ளார்.

முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பொழுதுபோக்கு தேவைகள் உட்பட அவர்களின் தேவைகளை பாதுகாப்பாக வழங்க விரும்புவதாக அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு புதிய தடுப்பூசி நிலையங்கள்