சிங்கப்பூரில் கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டு ஊழியர்களை சிறப்பாக கவனித்து வரும் குழு!

(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டு ஊழியர்களை கவனித்து வரும் மனிதவள அமைச்சகத்தின் (MOM) ACE பிரிவு நிரந்தரமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Assurance, Care and Engagement (ACE) குழு தற்போதைய கிருமிப்பரவலைத் தாண்டி அடுத்த பெரிய பரவலை கண்காணிக்க வேண்டும் என்று அதன் தலைவர் துங் யு ஃபாய் கூறினார்.

சிங்கப்பூரில் போலி S$10,000 பண நோட்டை பயன்படுத்தியதாக 3 பேர் கைது

ACE குழு தங்கும் விடுதிகளில் சமீபத்தில் அதிகரித்த கோவிட் -19 தொற்றுநோயை கண்காணித்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது.

ஊழியர்களின் முதலாளிகள், விடுதி ஆபரேட்டர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற பங்காளிகளுடன் இணைந்து ஊழியர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே இந்த ACE குழுமத்தின் நோக்கம்.

இந்த ACE குழுமத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் விடுதி ஆபரேட்டர்கள் மற்றும் முதலாளிகள் ஆகியோரின் பொறுப்புகளைக் அந்த குழு ஏற்றுக்கொள்ளாது என்றும் திரு. துங் கூறினார்.

தொடரும் உயிரிழப்பு – மேலும் 3 பேர் கிருமித்தொற்றால் மரணம்