சிங்கப்பூரில் மற்ற இனத்தை சேர்ந்தவரை தாக்கிப் பேசும் சம்பவம் ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பு – அமைச்சர் சண்முகம்..!

(Photo : REUTERS)

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதத்தில், மற்ற இனத்தை சேர்ந்தவரை தாக்கிப் பேசும் சம்பவம் அதிகரித்ததாக சட்ட, உள்துறை அமைச்சர் K. சண்முகம் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் COVID-19 பரவலால் ஏற்பட்ட மன அழுத்தம் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தவறுகளைக் களைவதில் சமூகத்தின் பங்கு குறித்து CNA க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் மசூதிகளில் ஆன்லைன் முன்பதிவுடன் மீண்டும் தொடங்கும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை..!

கூடுதலாக சிங்கப்பூரில் வெளிநாட்டினர் மீதான வெறுப்பு பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தனிநபர்கள் அடுத்தவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது பற்றியும் குறிப்பிட்டார். ஆனால், இந்த தவறுகளை சுட்டிக்காட்டுவது கூட்டமாக சேர்ந்து கொண்டு அடுத்தவர்களின் வாழ்க்கையை அழிக்கும் அளவுக்கு இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

ஒருவரின் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது நியாயமான முறையில் நடந்துகொள்வது அவசியம் என்பதை அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.

மேலும், பல ஆண்டு காலமாக இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இனம் சார்ந்த குறைகூறும் போக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் அது போன்ற தாக்கிப்பேசும் போக்குக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

Source : Seithi MediaCorp

இதையும் படிங்க : “தனிப்பட்ட சிரமங்களை வெளிக்காட்டாமல் குடும்பத்தின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் தந்தை” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg