சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு சவால்களை சமாளிப்பதற்கு பங்களிக்காத முதலாளிகளுக்கு கடும் விசாரணை..!

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு குறித்த சவால்களைச் சமாளிப்பதற்கு பங்களிக்காத முதலாளிகள் மீது அரசாங்கம் கடுமையான விசாரணை மேற்கொள்ளும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

அடுத்த 6-12 மாதங்களில் ஒரு பெரிய மற்றும் அவசர சவாலை எதிர்கொள்கிறோம் என்றும், சர்க்யூட்-பிரேக்கர் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டாலும், COVID-19 காரணமாக இன்னும் பலர் வேலை இழக்க நேரிடும் என்று திரு. தர்மன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 32,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து தற்காலிக இட வசதிகளுக்கு மாற்றம்..!

உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நாமும் பாதிக்கப்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில தொழில் துறைகள் மக்களை வேலைக்கு அமர்த்தும், அவர்களின் வளர்ச்சிக்கு முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

COVID-19 எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது, துரதிர்ஷ்டவசமாக இருந்தால் வேலைகள் இழப்பதை விட மிகக் குறைவான புதிய வேலை வாய்ப்புகள் நமக்கு இருக்கும் என்பதையும் சுட்டி காட்டினார்.

ஒரு தேசிய அணியாக இணைந்து, இந்த சவாலை நாம் சமாளிக்க வேண்டும். மேலும் வேலைகளைப் பாதுகாப்பது, மற்றும் மக்கள் வேலையை இழக்கும்போது மீண்டும் வேலைக்குச் செல்ல உதவுவது ஆகியவை அடிப்படை நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

We face a major and urgent challenge in the next 6-12 months. Many more people will be at risk of losing their jobs…

Posted by Tharman Shanmugaratnam on Wednesday, June 3, 2020

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தேசிய வேலைவாய்ப்பு மன்றத்துக்கு அவர் தலைமை வகிக்கிறார். ஊழியர்களில் நடுத்தர வயது கொண்ட, முதிர்ச்சியடைந்த சிங்கப்பூரர்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றும் திரு. தர்மன் கூறியுள்ளார்.

வேலை இல்லாதோருக்கான உதவித்திட்டங்கள் எவ்வளவுதான் வழங்கினாலும், அந்த உதவிகள் சம்பளத்துக்கு மாற்றாக அமையாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை இழப்பை சரி செய்ய உதவித்திட்டங்களை விட வேலை வாய்ப்புதான் சிறந்தது என்று திரு. தர்மன் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 517 பேர் பாதிப்பு – 15 பேர் சமூக அளவில் பாதிப்பு..!