சிங்கப்பூர் தரப்பு எண்ணங்களை முன் வைத்த அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் – கூர்ந்து நோக்கிய பிற நாட்டுத் தலைவர்கள்

minister vivian balakrishnan participates 4th indian ocean conference
minister vivian balakrishnan participates 4th indian ocean conference

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மாலத்தீவில் நடைபெற்ற இந்திய பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மாலத்தீவில் நடந்த 4 வது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் ஒரு பயனுள்ள முதல் நாள் அமைந்தது. இந்தியப் பெருங்கடல் தொடர்பான காலநிலை மாற்றம், பிராந்திய கட்டமைப்பைப் பேணுதல் உள்ளிட்ட பொருத்தமான பிரச்சனைகள் குறித்து நான் பேசினேன். பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புகளைத் திறப்பதற்கான முக்கிய அம்சமாக விமான மற்றும் கடல் இணைப்புகளை அதிகரிக்க இதர நாடுகளை ஊக்குவித்தேன்.

இந்தியப் பெருங்கடல் மாநாடு பல எண்ணம் கொண்ட நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கிறது. மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்த மரியாதை எனக்கு கிடைத்தது.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், பூட்டான் வெளியுறவு அமைச்சர் டாக்டர் தாண்டி டோர்ஜி, ஓமன் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் சையித் பத்ர் பின் ஹமாத் பின் ஹமூத் அல் புசைதி ஆகியோரை சந்திக்க நான் வாய்ப்பைப் பெற்றேன்.” என்றார்.