வூஹான் வைரஸ் குறித்து பரவிய வதந்தி; பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்…!

MOH is aware of rumours circulating online that an individual has died from the novel coronavirus infection at a shopping mall in Singapore.

உலகை அச்சுறுத்தி வரும் இந்த வூஹான் “கொரோனா” வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகள் முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும், பரவாமல் இருக்க முயற்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் இந்த கிருமி தொற்று நான்கு பேருக்கு இருப்பது சுகாதார அமைச்சகத்தால் (MOH) உறுதி செய்யப்பட்டது, அவர்கள் அனைவரும் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் MOH தகவல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சீரான நிலையில் இருப்பதாகவும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட நான்காவது நபரை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

இந்நிலையில், சிங்கப்பூரில் வூஹான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளை சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் MOH உறுதிப்படுத்தியுள்ளது.

இதுபற்றி அமைச்சகம் கூறியதாவது;

“சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு நபர் இறந்துவிட்டார் என்று ஆன்லைனில் பரப்பப்படும் வதந்திகளை MOH அறிந்தது. இன்றுவரை சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட இந்த வைரஸ் சம்பவங்களில் இறப்புகள் எதுவும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்”

மேலும், “ஆதாரமற்ற வதந்திகளை ஊகிக்க மற்றும் / அல்லது பரப்ப வேண்டாம் என்று சிங்கப்பூரர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம். கொரோனா வைரஸ் நிலைமை குறித்த தகவலுக்கு www.moh.gov.sg என்ற இணையத்தை பார்வையிடவும்” என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; “அமைதியாகவும் ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும்” – பிரதமர் லீ…!

சிங்கப்பூரில் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், தங்களுக்கு கிடைக்கும் தகவலை சிங்கப்பூரர்கள் சரிபார்க்க வேண்டும், பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம், என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவுறுத்தி கூறியுள்ளார்.

மேலும், “முக்கியமாக, நமக்கு கிடைக்கும் தகவல் உண்மையானதா என்பதை சரிபார்க்க வேண்டும், பொய்யான தகவல் பரவாமல் தடுக்க நாம் தகவலை உறுதிசெய்ய வேண்டும்” என்றார்.