சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

MOH reported 27th death from the COVID-19 disease
MOH reported 27th death from the COVID-19 disease (Photo from Google Maps)

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மொத்தம் 27 பேர் இந்த கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 193 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

அதாவது சம்பவம் 17168 என அடையாளம் காணப்படும், 62 வயதான சிங்கப்பூரர் இதில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவருக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா என்னும் ரத்தத்தில் கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்கனவே இருந்துள்ளது என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், செங்காங் பொது மருத்துவமனை அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறது என்று MOH கூறியுள்ளது.

உயிரிழந்த அவரின் வீட்டில், 19136 மற்றும் 19343 என அடையாளம் காணப்படும் சம்பவங்கள், முறையே 58 வயதான சிங்கப்பூர் பெண் மற்றும் 24 வயதான சிங்கப்பூர் ஆண் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு துப்பாக்கி கடத்தல் – இருவருக்கு சிறை மற்றும் அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      – https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  – https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat  https://sharechat.com/tamilmicsetsg

Related posts