சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 115 பேர் முழுமையாக மீண்டுள்ளனர் – MOH..!

MOH said 115 more patients have been discharged after making a full recovery
MOH said 115 more patients have been discharged after making a full recovery on may 06 (Photo: iStock)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மீண்டு 115 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது மொத்தம் 1,634 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுமார் 200,000 பராமரிப்புப் பொட்டலங்கள்..!

மேலும் 1,462 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 17,082 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 7 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – MOH..!