COVID-19: வேலை அனுமதி அட்டை உடையவர்கள் கவனத்திற்கு – மனிதவள அமைச்சகம்..!

COVID-19 - Entry Approval and Stay-Home Notices
MOM Entry Approval and Stay-Home Notices Now Covers All New and Existing Work Pass Holders (Photo : Straits Times)

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் COVID-19 சம்பவங்களின் அபாயத்தை கருத்தில் கொண்டு, சிங்கப்பூருக்குள் நுழையும் அல்லது திரும்பும் அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனிதவள அமைச்சகம் (MOM) செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

நாளை (மார்ச் 20) இரவு 11.59 மணி முதல், சிங்கப்பூருக்குள் நுழையத் திட்டமிடும் வேலை அனுமதி அட்டை உடைய அனைவரும் (அவர்களைச் சார்ந்திருப்போர் உட்பட), தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், மனிதவள அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் திரும்பும் அனைவருக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!

மேலும் சிங்கப்பூருக்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 14-நாள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்:

  • எல்லா நேரத்திலும் வீட்டிலேயே இருக்க வேண்டும்
  • உணவு அல்லது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லவேண்டாம்
  • விநியோக சேவைகளைப் பயன்படுத்தவும் அல்லது அண்டைவீட்டார் / அடித்தள அமைப்புகளின் உதவியை நாட வேண்டும்
  • பிறருடன் தொடர்பைக் குறைத்துக்கொள்ளவும்
  • வருகையாளர்களைத் தவிர்க்கவும்

தண்டனைகள்

இந்த உத்தரவை மீறி, முதல் முறை குற்றம் புரிவோருக்கு $10,000 அபராதம் விதிக்கப்படலாம், 6-மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கூடுதல் விவரங்களுக்கு : go.gov.sg/momentry  / go.gov.sg/govsg-shn

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 300ஐ தாண்டியது..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil