வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பதில் உள்ளூர் பணியாளர்களை பணியில் அமர்த்தலாமே? – அமைச்சர் பதில்.!

(photo: mothership)

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் நேற்று, கடந்த 2005ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை தகவல் தொடர்பு துறைகளில் வெளிநாட்டினருக்கு எம்பிளாய்மென்ட் பாஸ் வழங்கப்படுவது 40% வரை அதிகரித்தது, இருப்பினும் அவ்விரு துறைகளிலும் உள்ளூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளுக்காக (பிஎம்இ) அதிக அளவில் வேலைகள் உருவாக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

தகவல் தொடர்பு துறையில் வெளிநாட்டினருக்கு 25,000 மற்றும் நிதித்துறையில் 20,000 எம்பிளாய்மென்ட் பாஸ் வழங்கியதுடன் உள்ளூர் பிஎம்இ பிரிவினருக்கு அதே துறைகளில் ஏறத்தாழ 35,000 மற்றும் 85,000 வேலைகள் உருவாக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் டாக்டர் டான் தெரிவித்தார்.

உள்ளூர் பிஎம்இ பிரிவினரை புறக்கணித்துவிட்டு, எம்பிளாய்மென்ட் பாஸ் அதிகமாக வழங்கபட்டதா என சிங்கப்பூர் முன்னேற்ற கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் லியோங் மன் வாயும், ஹேஸஸ் பூவாவும் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக டாக்டர் டான் கூறியதாவது, சிங்கப்பூர் தன்னைப் பேணித்தனக் கொள்கைக்கு மாறுவதால் உலகம் முழுவதும் இருந்தும் திறனாளர்கள் ஈர்ப்பதில் நிறுவனங்களுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் அபாயம் குறித்து எச்சரித்தார், மேலும் போட்டி இங்கில்லை என்றால் நிச்சயம் வெளியில் இருக்கும், அது நம் நிறுவனங்களை தோற்கடிக்கவும், ஊழியர்களை இடம் பெயரை செய்யும் என அவர் கூறினார்.

எம்பிளாய்மென்ட் பாஸ் பெற்ற வெளிநாட்டினர் 177,000 பேரில் கிட்டத்தட்ட பத்து விழுக்காட்டினர் உற்பத்தி, கட்டுமான துறைகளிலும் மீதமுள்ளோர் சேவை துறையிலும் இருப்பதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

2005 முதல் 2020 வரை, எம்பிளாய்மென்ட் பாஸ் பெற்று இருப்போர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,12,000 அதிகரித்துள்ளது, அதே வேளையில் உள்ளூர் பிஎம்இ பிரிவினருக்கு 3,80,000 வேலைகள் உருவாக்கப்பட்டதாக கூறினார்.

சிங்கப்பூர் நல்ல திறனாளர்களை கொண்டிருந்தாலும் அது நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் மேலும் கூறினார். வெளிநாட்டினருக்கு வேலை அனுமதி மறுத்துவிட்டாள் உள்ளூர் வாசிகளுக்கு வேலை கிடைக்கும் என்ற கூற்று தவறானது, இன்றும் கூட பல பிஎம்இ வேலை இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்றார்.

எம்பிளாய்மென்ட் பஸ்ஸுக்கான ஊதியம் 3,600 வெள்ளிகளில் இருந்து 3,900 வெள்ளிகளாகவும் பின்னர் 4,500 வெள்ளிகளாக உயர்த்தப்பட்டன. நிதித்துறையில் இதற்கான ஊதியம் 5,000 வெள்ளிகளாக இருந்து வருகிறது.

உள்ளுர்வாசிகளுக்கு நல்ல வேலை, உயர்த்த வாழ்கைத்தரம், உலகத்தரமான கல்வி, திறன் மேம்பாடு சிறப்பாக வழங்குவதற்கு அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக டாக்டர் டான் வலியுறுத்தி கூறினார்.