ஜூரோங் தங்கும் விடுதியில் தரமில்லாத உணவு வழங்கல் போன்ற மீறல்கள் குறித்து புகார் – MOM விசாரணை

foreign workers singapore job illegal
(Photo: Ministry of Manpower)

ஜூராங்கின் ஜலான் துகாங்கில் உள்ள தங்கும் விடுதியில், கோவிட்-19 சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகள் மீறல், மருத்துவ உதவி கிடைக்காதது மற்றும் தரமில்லாத உணவு வழங்கல் பற்றிய புகார்களுக்கு மனிதவள அமைச்சகம் (MOM) விசாரணை மேற்கொள்கிறது.

இதனை விசாரிக்க MOM-ன் ஃபார்வர்ட் அஷ்யூரன்ஸ் மற்றும் சப்போர்ட் டீம்ஸ் (FAST) அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (அக். 13) அந்த விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.

சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக மேலும் 9 பேர் உயிரிழப்பு

அன்று நண்பகல் 12.55 மணியளவில் தங்கும் விடுதியில் உதவி வேண்டி சிங்கப்பூர் போலீஸ் படைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று Weixin வெளியிட்ட ஆன்லைன் கட்டுரையில் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன என்று CNAவின் கேள்விகளுக்கு MOM செய்தித் தொடர்பாளர் பதிலளித்தார்.

Weixin என்பது சீனாவில் பயன்படுத்தப்படும் WeChatன் உள்நாட்டு தயாரிப்பாகும்.

ஆரம்ப விசாரணைகளில், கோவிட் -19 “பாசிட்டிவ்” உறுதி செய்யப்பட்ட ஊழியர்களை அவர்களின் அறைகளில் இருந்து பராமரிப்பு அல்லது மீட்பு இட வசதிக்கு கொண்டு வருவதில் உண்மையில் சில தாமதங்கள் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் MOM கூறியது.

மேலதிக மருத்துவ பராமரிப்பு தேவைப்படுபவர்களை சிகிச்சைக்காக பராமரிப்பு வசதிகளுக்கு மாற்றுவதற்காக வேலை செய்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆன்டிஜென் விரைவு சோதனையில் நெகடிவ் முடிவு பெற்ற தொற்று பாதிக்கப்பட்டவர்களின் அறை தோழர்கள் பணிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

“சிங்கப்பூர்-சென்னை-திருச்சி” இடையே கூடுதல் விமான சேவை