வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம், தரம் குறித்து எழுந்த புகார் – கவனம் செலுத்தும் நிறுவனம்

In a Weixin article, migrant workers said they found insects in their catered food. (Photo: Weixin)

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம் மற்றும் தரம் குறித்த கருத்துகளுக்கு செம்ப்கார்ப் மரைன் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை வெஸ்ட்லைட் ஜலான் துகாங் தங்கும் விடுதியில் மனிதவள அமைச்சின் (MOM) விசாரணை பற்றிய சிஎன்ஏவின் கேள்விகளுக்கு பதிலளித்த அந்நிறுவனம், சுகாதார தரத்தை கண்டிப்பாக கடைபிடிப்பது குறித்து உணவு வழங்கும் பிரிவுக்கு நினைவூட்டல்களை வெளியிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 23 வயது ஆடவர் உட்பட கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 15 பேர் உயிரிழப்பு

லாரி டிரைவரின் அலட்சியத்தால் இருவர் பலி!

“பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களின் மாறுபட்ட உணவு விருப்பங்களை நிறுவனம் அறிந்திருக்கிறது.”

மேலும், தனிநபர்களின் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவு வழங்கும் பிரிவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை, COVID-19 சுகாதார நெறிமுறைகள் மீறல், மருத்துவ உதவி இல்லாமை மற்றும் தங்கும் விடுதியில் வழங்கப்பட்ட உணவின் மோசமான தரம் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க MOM தனது அதிகாரிகளை அந்த விடுதிக்கு அனுப்பியது.

இதில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காணமுடிகிறது.

மேல் விவரங்கள் அறிய: ஜூரோங் தங்கும் விடுதியில் தரமில்லாத உணவு வழங்கல் போன்ற மீறல்கள் குறித்து புகார்