பாதுகாப்பு இல்லாமல் யிஷூனில் ஒரு கூடாரத்தின் மேல் தொழிலாளர்கள் நடந்து சென்ற சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் விசாரணை!!

MOM investigating after Stomper sees workers walking on tent without safety measures in Yishun (Photo: Stomp)

பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் யிஷூனில் ஒரு கூடாரத்தின் மேல் தொழிலாளர்கள் நடந்து சென்ற சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) விசாரணை நடத்தி வருகிறது.

ஸ்டோம்பர் ஜே.சி (Stomper JC) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 17) அன்று பிற்பகல் 2.50 மணியளவில் 2 யிஷுன் சென்ட்ரல் 2 ஐ கடந்து நடந்து கொண்டிருந்தார்.

அவர் கூறுகையில் “கூடாரம் வடிவமைக்கப்பட்ட மேற்கூரை Step-Froof கொண்டதா ? நபர்கள் அதன் அதன் மீது நடந்து கொண்டிருக்கின்றனர், அதில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நான் காணவில்லை”, என்றார்.

அந்த மேற்பரப்பும் தட்டையானது அல்ல. அது வட்டமானது மற்றும் பொருள் மென்மையானது, தொழிலாளர்கள் நழுவினால் என்ன ஆகும்,? அந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்ன நடக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அதன் விளைவு மிக மோசமாக கூட இருக்கலாம்.

மேலும், என்னைப் பொறுத்தவரை இது முற்றிலும் தடுக்கக்கூடியது. இது ஆபத்தானது, நான் யாரையும் தூண்டிவிட விரும்பவில்லை, ஆனால் அது பாதுகாப்பற்றது. அவர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், என்று அவர் கூறினார்.

இந்நிலையில், MOM இந்த சம்பவம் பற்றி விசாரித்து வருகிறது என்று MOM செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.