புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சேவை வழங்கும் நிலையம் – 30 தங்கும்விடுதிகளில் தடுப்பூசி…!

Photo Credit: TODAY

புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவு செய்வதற்கும், தேவையான மருத்துவ பரிசோதனையைப் பெறுவதற்கும், அறிமுகப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் பொங்கோலில் சேவை வழங்கும் நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறையை சார்ந்த புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்கள் அந்த சேவை வழங்கும் நிலையத்தில் தங்கவைக்கப்படுவர்.

வெளிநாட்டு ஊழியர்கள் நடமாடும் தடைகள் கட்டங் கட்டமாக தளர்த்தப்படும்!

யூனோஸ் மற்றும் தெங்காவில் மேலும் மூன்று வெளிநாட்டு ஊழியர் சேவை நிலையங்கள் உள்ளன.

எதிர்காலத்தில் இந்த நிலையத்திற்கு வரும் புதிய வருகையாளர்களுக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று மனிதவளத்தின் இரண்டாவது அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

தற்போதைக்கு, வெளிநாட்டு ஊழியர்களுக்கான தடுப்பூசிபோடும் திட்டம் அதன் இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதால், 30 தங்கும்விடுதிகளில் வசிக்கும் சுமார் 30,000 ஊழியர்களுக்கு வரவிருக்கும் வாரங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது.

முதல் கட்டத்தில், சுமார் 9,000 ஊழியர்களில் 97 சதவீதம் பேர் முதல் முறை தடுப்பூசியை போட்டுக்கொண்டனர் என்று பொங்கோல் சேவை வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்த டாக்டர் டான் கூறினார்.

உடல் எடையை குறைக்க உதவுதாக விற்பனை செய்யப்படும் 4 தயாரிப்புகளில் தடைசெய்யப்பட்ட பொருள்