வெளிநாட்டு ஊழியர்களே ஆட்குறைப்பு நடவடிக்கையில் அதிகம் பாதிப்பு!

கடந்த ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் விகிதமானது முந்திய இக்கட்டான காலகட்டத்தை ஒப்பிடுகையில் குறைவு என்று மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

1998 ஆசிய பொருளியல் நெருக்கடி மற்றும் 2001 ‘டாட்.காம்’ சிக்கல்களுக்கு பிறகு அதிக ஊழியர்கள் கடந்த ஆண்டில் வேலை இழந்ததாக தெரிவித்துள்ளது.

முந்தைய இக்கட்டான காலகட்டத்தின்போது ஆயிரம் பேருக்கு 22.5 ஆக இருந்த ஊழியர்களின் வேலை இழப்பானது கடந்த ஆண்டில் 12.8ஆக குறைந்துள்ளது.

வேலைக்காக ஊழியர்கள் செல்ல விரும்பும் நாடுகளில் சிங்கப்பூர் 8வது இடம்!

உள்ளூர்வாசிகளை ஒப்பிடுகையில் வெளிநாட்டு ஊழியர்களே இந்த நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர்வாசிகளில் ஆயிரத்திற்கு 11.1 ஆகவும், வெளிநாட்டினர் 15.7 ஆகவும் பாதிக்கப்ட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

மறு வேலையைத் தேடிக்கொண்டதில் 67 சதவீதத்தினர் வேறு துறைகளுக்கு மாறியதாக MOM தெரிவித்துள்ளது.

காலி பணியிடங்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் 56,500ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல்