பெரிய ஆமையின் கழுத்தை கடித்து கிழித்து வேட்டையாடும் பெரிய உடும்பு

Monitor lizard chomps turtle
Photo: Jared Tan

மீன்கொத்திகளை புகைப்படம் எடுக்கும் நம்பிக்கையில் Jared Tan என்பவர் கடந்த செப். 12 காலை, சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவிற்கு (Botanic Gardens) சென்றார்.

அதற்கு பதிலாக, அவருக்கு வேறொரு சம்பவம் காத்திருந்தது. ஆம், மிகப்பெரிய உடும்பு ஒன்று பெரிய ஆமையின் கழுத்தை கடித்து கிழித்து கொண்டிருந்ததை அவர் கண்டார்.

தங்கும் விடுதியில் 63 பேருக்கு தொற்று பாதிப்பு – புதிய குழுமம் அடையாளம்

அந்த உடும்பு வருவதற்கு முன், ஏற்கனவே அந்த ஆமை இறந்துவிட்டது என்றும் டான் மதர்ஷிப்பிடம் சொன்னார்.

உடும்புகள் பெரும்பாலும் மாமிச உண்ணியாக இருக்கின்றன, அவைகள் உணவை வேட்டையாடி கொடூரமாக உண்ணும் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

Photo courtesy of Jared Tan

அவைகள் இறந்த அல்லது உயிருடன் கையில் கிடைக்கும் எதையும் உட்கொள்ளும்.

உண்ணுவதற்கு முன், உடும்பு அந்த ஆமையை நெருங்கி ஆய்வு செய்தது. பின்னர் கழுத்தை பிடித்து கிழித்து கொடூரமாக வேட்டையாடியது.

15 நிமிடங்களுக்குப் பிறகு, உடும்பின் பசி திருப்தியடைந்ததாகத் தோன்றியது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆமையின் மீதி உடம்பை பெரும்பாலும் அப்படியே விட்டுவிட்டது என்றும் டான் கூறினார்.

விடுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு – மகிழ்ச்சி தெரிவிக்கும் இந்திய ஊழியர்கள்!