சிங்கப்பூர் குழந்தைகள் தங்களுடைய முதல் பாஸ்போர்ட்டை இலவசமாகப் பெறலாம் !!

இனி அதிகமான சிங்கப்பூர் குழந்தைகள் தங்களுடைய முதல் பாஸ்போர்ட்டை இலவசமாகப் பெறலாம் என்று ICA தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் விரிவாக்கப்பட்டதை தொடர்ந்து இனி அதிகமான சிங்கப்பூர் குழந்தைகள் தங்கள் முதல் பாஸ்போர்ட்டை இலவசமாகப் பெறலாம், என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) செவ்வாய்க்கிழமை (அக். 15) அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 1, 2020 முதல் அல்லது அதற்குப் பிறகு பிறந்த சிங்கப்பூர் சிட்டிசன் குழந்தைகளுக்கு முதல் பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் S$ 70 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகுதிக்கான அளவுகோல்களை மறுஆய்வு செய்ததை தொடர்ந்து, ஜனவரி 1 முதல் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் கட்டணம் தள்ளுபடியில் அடங்கும். இது குறிப்பாக குழந்தையின் முதல் பிறந்தநாள் அல்லது அதற்கு முன்போ செய்யப்படும் வரை மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் 2019 இல் பிறந்த சிங்கப்பூர் குழந்தைகளுக்கும் மற்றும் 2020 ஆம் ஆண்டில் முதல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் சிங்கப்பூர் குழந்தைகளுக்கும் பயனளிக்கும்” என்று ICA தெரிவித்துள்ளது.

இந்த பாஸ்போர்ட் கட்டண தள்ளுபடி ICA வலைத்தளத்தில் ஆன்லைன் சமர்ப்பிப்புகளுக்கு மட்டும் பொருந்தும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு, அடுத்த வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பாஸ்போர்ட் பெற இனி உடன் இருக்க தேவையில்லை என்று ICA கூடுதல் தகவல் தெரிவித்துள்ளது.