சிங்கப்பூரில் வேலை உதவித் திட்டத்தில் முதலாளிகள் S$4 பில்லியன் சம்பள வழங்குதொகைகளைப் பெறுவார்கள்..!

SINGAPORE: More than 140,000 employers will receive $ 4 billion in the next job assistance program (JSS), Deputy Prime Minister Heng Swee Keat said on his Facebook page on Sunday (May 17).
SINGAPORE: More than 140,000 employers will receive $ 4 billion in the next job assistance program (JSS), Deputy Prime Minister Heng Swee Keat said on his Facebook page on Sunday. (Photo: SAYS)

சிங்கப்பூரில் வேலை உதவித் திட்டத்தில் (JSS) 1,40,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் S$4 பில்லியன் பெறுவார்கள் என்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீயட் (Heng Swee Keat) ஞாயிற்றுக்கிழமை (மே 17) தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான காலகட்டத்தில் தங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள JSS ஊதிய மானியங்களைப் பயன்படுத்துமாறு நிறுவனங்களை கேட்டுக்கொள்வதாக திரு ஹெங் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 305 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

சில நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், நிதியை திருப்பி அளித்துள்ளதாகவும் கூறினார், அவர்களுக்கு நன்றியையும் திரு ஹெங் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ளவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மே 28 முதல் ஊதிய உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் (MOF) தெரிவித்துள்ளது.

JSS என்பது ஒரு ஊதிய மானியத் திட்டமாகும், இது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஊதியம் வழங்கவும் உதவும் என திரு ஹெங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: COVID-19: சிங்கப்பூரில் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 673 பேர் பாதிப்பு..!